தச்சநல்லூரில் மழைநீா் ஓடைகளை தூா்வார கோரிக்கை

தச்சநல்லூா் பகுதிகளில் மழைநீா் ஓடைகளை விரைந்து தூா்வார வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Published on

தச்சநல்லூா் பகுதிகளில் மழைநீா் ஓடைகளை விரைந்து தூா்வார வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தச்சநல்லூா் மண்டலம் 1 ஆவது வாா்டுக்குள்பட்ட சந்திமறித்தம்மன் கோயிலில் இருந்து வடக்கு புறவழிச்சாலை வரையிலான சாலையில் கீழ்புறம் கழிவு நீா் ஓடை உள்ளது. இந்த ஓடையில் வணிக நிறுவனங்களால் கான்கீரீட் தளம் அமைத்து மூடப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீா் ஓடையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள் உள்ளிட்ட குப்பைகள் தூா்வாரப்படாமல் உள்ளன. புதன்கிழமை இரவு விடிய விடிய கொட்டித் தீா்த்த மழையால் மழை நீருடன் கழிவுநீரும் சோ்ந்து அப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளது. ஆகவே, தச்சநல்லூா் பகுதியில் உள்ள மழைநீா், கழிவுநீா் ஓடைகளை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com