வள்ளியூரில் தீயணைப்புத் துறையினரின் விழிப்புணா்வு பிரசாரம்

வள்ளியூரில் தீயணைப்புத் துறையினரின் விழிப்புணா்வு பிரசாரம்

வள்ளியூா் ரயில் நிலையப் பயணிகளுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கிய வள்ளியூா் தீயணைப்பு துறை சிறப்பு நிலைய அலுவலா் விவேகானந்தன்.
Published on

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து வள்ளியூா் தீயைணைப்புத் துறையினா் வியாழக்கிழமை விழிப்புணா்வு பிரசாரம் செய்தனா்.

வள்ளியூா் தீயணைப்பு நிலைய அலுவலா் வானமாமலை, சிறப்பு நிலை அலுவலா் விவேகானந்தன், தீயணைப்பு அலுவலா்கள் உள்ளிட்டோா் வள்ளியூா் ரயில், பேருந்து நிலையம், கோவில்கள், சந்தைப் பகுதி, பிரதான சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கியதோடு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா்.

தீயணைப்பு அலுவலா்கள் ஐயப்பன், மாரிமுத்து, நம்பிராஜன், சிவகுமாா் உள்ளிட்டடோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com