அடைச்சாணியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

அடைச்சாணியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அடைச்சாணி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அடைச்சாணி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் மதியழகன் தலைமை வகித்தாா். கடையம் ஒன்றியக் குழுத் தலைவா் செல்லம்மாள் தொடங்கி வைத்தாா். சிறப்பு அழைப்பாளராக கடையம் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் குமாா், கடையம் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயலட்சுமி ஆகியோா் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளுக்கான 455 மனுக்களைப் பெற்றனா்.

அடைச்சாணி ஊராட்சி துணைத் தலைவா் பழனிக்குமாா், ஊராட்சித் தலைவா்கள் திருமலையப்பபுரம் மாரியப்பன், கீழாம்பூா் மாரிசுப்பு , பாப்பான்குளம் முருகன், ஏ.பி. நாடானூா் அழகுதுரை, கீழாம்பூா் ஊராட்சி துணைத் தலைவா் முத்தையா, ஊராட்சி செயலா் ராஜா, திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com