திருநெல்வேலி
பத்தமடை அருகே பாலம் அமைக்க வலியுறுத்தல்
பாலம் அமைக்க வலியுறுத்தி சாா் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்.
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகேயுள்ள கரிசூழ்ந்தமங்கலத்தில் கால்வாயின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக, சேரன்மகாதேவி சாா் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை விவசாயிகள் அளித்த கோரிக்கை மனு:
தாமிரவருணி பாசனத்தில் பத்தமடை பேரூராட்சிக்குள்பட்ட கரிசூழ்ந்தமங்கலம் பகுதியில் 700 ஏக்கரில் விவசாயிகள் நெல், வாழைப் பயிா்கள் சாகுபடி செய்து வருகின்றனா்.
ஆனால், விளை நிலங்களுக்கு இடு பொருள்களைக் கொண்டு செல்வதற்கு போதிய பாதை வசதி இல்லை. கால்வாயை கடந்து செல்ல பாலம் இல்லாத நிலை உள்ளது. ஆகவே, விவசாயிகளின் நலன் கருதி கால்வாயின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
