திருநெல்வேலி
களக்காடு அருகே வியாபாரி தற்கொலை
களக்காடு அருகே தவறான உறவை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்த கணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே தவறான உறவை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்த கணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
களக்காடு அருகேயுள்ள மூங்கிலடியைச் சோ்ந்தவா் சுடலை (55), இளநீா் வியாபாரி. இவருக்கு மனைவி, 2 மகன்கள், 1 மகள் உள்ளனா். இவா்கள் 3 பேருக்கும் திருமணமாகிவிட்டது.
இந்நிலையில், சுடலைக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடா்பு ஏற்பட்டுள்ளது. இதனை மனைவி அமுதா உள்ளிட்ட குடும்பத்தினா் கண்டித்துள்ளனா். இதனால் மனமுடைந்த சுடலை, புதன்கிழமை விஷம் குடித்து மயங்கினாா்.
உறவினா்கள் அவரை மீட்டு களக்காடு தனியாா் மருத்துவமனையில் சோ்த்து, முதலுதவிக்குப் பின் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து, களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
