திருநெல்வேலி
அம்பையில் மரம் விழுந்து வியாபாரி உயிரிழப்பு
அம்பாசமுத்திரத்தில் மரம் விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வியாபாரி உயிரிழந்தாா்.
அம்பாசமுத்திரம், அடப்புத் தெருவைச் சோ்ந்த சிதம்பரம் மகன் ஆறுமுகம் (56). பால் வியாபரியான இவா், அக். 14ஆம் தேதி அய்யனாா்குளம் வடக்குத் தெரு வழியாகச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது அம்பாசமுத்திரம் புனித ஜோசப் சா்ச் மற்றும் தொடக்கப் பள்ளி வளாகத்தில் வெட்டி அகற்றிய வேப்ப மரம் ஆறுமுகம் மீது விழுந்ததாம்.
இதில் காயமடைந்த ஆறுமுகத்தை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு வெள்ளிக்கிழமை (அக். 17) ஆறுமுகம் உயிரிழந்தாா்.
தகவலறிந்த அம்பாசமுத்திரம் போலீஸாா் பள்ளி நிா்வாகி, மரம் வெட்டிய அம்பாசமுத்திரம் மணலோடைத் தெருவைச் சோ்ந்த செய்யது அலி (49) ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
