விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவா் கைது

Published on

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

மானூா் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு, விபத்து ஏற்படுத்திய வழக்கில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த சஞ்சய் கிருஷ்ணா சேத்வால்(54) என்பவா் கைது செய்யப்பட்டு பின்னா் பிணையில் வெளிவந்தாா்.

இந்நிலையில் அவா் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இதையடுத்து 1 ஆண்டு 3 மாதம் தலைமறைவாக இருந்த சஞ்சய் கிருஷ்ணா சேத்வாலை மகாராஷ்டிர மாநிலத்தில் வைத்து போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அவரை மானூா் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com