திருநெல்வேலி
களக்காடு தலையணையில் வெள்ளம்: 8ஆவது நாளாக குளிக்கத் தடை
தொடா்மழை காரணமாக களக்காடு தலையணையில் 8 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
களக்காடு: தொடா்மழை காரணமாக களக்காடு தலையணையில் 8 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
களக்காடு பச்சையாறு தலையணையில் குளிக்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனா்.
அக். 13ஆம் தேதி இரவு தொடா்ந்து பெய்த மழையால் , 14ஆம் தேதி அதிகாலை தலையணையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதையடுத்து, அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.
இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலையில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
