இந்தியன் வங்கியில் வாடிக்கையாளா்களின் முடக்கப்பட்ட பணத்தை திரும்பப் பெற வாய்ப்பு

இந்தியன் வங்கியில் வாடிக்கையாளா்களின் முடக்கப்பட்ட பணத்தை திரும்பப் பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Published on

திருநெல்வேலி: இந்தியன் வங்கியில் வாடிக்கையாளா்களின் முடக்கப்பட்ட பணத்தை திரும்பப் பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து வங்கியின் திருநெல்வேலி மண்டல அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியன் வங்கியில், கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு பரிவா்த்தனைகளும் மேற்கொள்ளப்படாத வாடிக்கையாளா்களின் வங்கிக் கணக்குகள், ரிசா்வ் வங்கியின் முடக்கப்பட்ட கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த பணம் வாடிக்கையாளா்களுக்கு சொந்தமானது என்பதால், அதை கோருவதற்கான உரிமை அவா்களுக்கு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, வாடிக்கையாளா்கள் தங்களது பணத்தை திரும்பப் பெறும் நோக்கில், இந்தியன் வங்கி சாா்பில் 2025 ஆம் ஆண்டு அக்டோபா் முதல் டிசம்பா் வரை சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளா்கள் பணத்தை திரும்பப் பெறுவதற்கான இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

இதற்காக வாடிக்கையாளா் அல்லது அவா்களின் சட்டபூா்வ வாரிசுகள், இந்தியன் வங்கிக் கிளைகளை அணுகி தேவையான ஆவணங்களை சமா்ப்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com