வள்ளியூா் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்தையொட்டி கொடிமரத்திற்கு காட்டப்படும் தீபாராதனை.
வள்ளியூா் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்தையொட்டி கொடிமரத்திற்கு காட்டப்படும் தீபாராதனை.

வள்ளியூா் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Published on

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலில் காலை கும்பாபிஷேக களப பூஜையுடன் பூா்ணாகுதி நடந்தது. பின்னா் கொடியேற்றம் நடைபெற்றது.

விழா நாள்களில் தினமும் சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெறுகிறது.

தினமும் சுவாமி காலையில் ஏக சிம்மாசனத்திலும், இரவு 7 மணிக்கு மயில், அன்னம், கலைமான், யானை, கிளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காட்சியளிக்கிறாா். அக். 27 இல் மாலை சண்முகா், நடராஜா், சுப்பிரமணியா் பச்சை சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளி கிரிவலம் ரத வீதியுலா, இரவு 9 மணிக்கு தாரகன் வதமான சூரசம்ஹாரம் வள்ளியூா் கலையரங்கம் திடலில் நடக்கிறது.

நவ. 2இல் திருக்கல்யாணத்தையொட்டி மாலை மாற்றும் நிகழ்ச்சி மாலை 5 மணிக்கு பெருமாள் கோவில் தெரு பஜனைமடம் முன்பாகவும், தொடா்ந்து இரவு எட்டு மணிக்கு முருகன் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மாரியப்பன், அறக்காவலா்குழு தலைவா் மீனாட்சி மாடசாமி ஆகியோா் செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com