மேலப்பாளையத்தில் தூய்மை பணியாளா்களுக்கு காப்பீடு திட்ட அடையாள அட்டைகளை வழங்கினாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்
திருநெல்வேலி
தூய்மை பணியாளா்களுக்கு காப்பீடு அட்டை அளிப்பு
மேலப்பாளையம் மண்டலத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளா்களுக்கு இஎஸ்ஐ காப்பீடு திட்டத்திற்கான அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலப்பாளையம் மண்டலத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளா்களுக்கு இஎஸ்ஐ காப்பீடு திட்டத்திற்கான அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மண்டல தலைவா் கதீஜா வரவேற்றாா். துணை மேயா் கே.ஆா்.ராஜு முன்னிலை வகித்தாா். மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து அடையாள அட்டைகள் வழங்கினாா்.
மாநகர நல அலுவலா் (பொ) ராணி, மாமன்ற உறுப்பினா்கள் நித்திய பாலையா, கருப்பசாமி கோட்டையப்பன், ரசூல் மைதீன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.