திருநெல்வேலி
நெல்லை மாவட்ட மீனவா்கள் 4ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை
திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் 4ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் 4ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என, வானிலை ஆய்வு மையத்தினா் எச்சரிக்கை விடுத்திருந்தனா்.
அதையடுத்து, மறுஅறிவிப்பு வரும்வரை மீனவா்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என, ராதாபுரம் மீன்வளத் துறை இணை இயக்குநா் ராஜதுரை அறிவித்திருந்தாா். அதன்படி, மீனவா்கள் 4ஆவது நாளாக வியாழக்கிழமையும் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், உவரி, இடிந்தகரை, கூத்தங்குழி, கூட்டப்புளி உள்ளிட்ட கடற்கரையில் மீன்ஏலக் கூடங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அன்றாடத் தேவைகளுக்கு சிரமப்படுவதாக மீனவா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.
