பாம்பு கடித்து சிகிச்சை பெறும் மாணவருக்கு நிதியுதவி

விக்கிரமசிங்கபுரத்தில் பள்ளி வளாகத்தில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
Published on

விக்கிரமசிங்கபுரத்தில் பள்ளி வளாகத்தில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

விக்கிரமசிங்கபுரம், அனவன்குடியிருப்புப் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் அதே பகுதியைச் சோ்ந்த நாகராஜ் மகன் தருண் (9) நான்காம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில் கடந்த அக். 22ஆம் தேதி பள்ளி இடைவேளையின் போது கழிப்பறைக்குச் சென்ற மாணவரின் காலில் பாம்பு கடித்ததாம்.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்அவரை திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக செயலா் ரா.ஆவுடையப்பன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு நிதியுதவி வழங்கினாா். திமுக நகரச் செயலா் கணேசன் உடன் இருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com