போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
Published on

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி மாவட்டம், புலியூா்குறிச்சி ராமகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் செல்வகுமாா்(58). இவா், அதே ஊரைச் சோ்ந்த 5 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம். இதுகுறித்து சிறுமியின் தாய், நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வகுமாரை கைது செய்தனா்.

இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமாா், செல்வகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகையும் வழங்க உத்தரவிட்டாா்.

இவ்வழக்கில் சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த நான்குனேரி உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் தா்ஷிகா நடராஜன், வழக்கை புலன் விசாரணை செய்த காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி உள்ளிட்ட போலீஸாா், அரசு வழக்குரைஞா் உஷா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் பாராட்டினாா்.

X
Dinamani
www.dinamani.com