திருநெல்வேலி
வள்ளியூா் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக்.28) மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வள்ளியூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் தா.வளன்அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வள்ளியூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதால், வள்ளியூா், செம்பாடு, கிழவனேரி, சமாதானபுரம், வடலிவிளை, தெற்குவள்ளியூா், ஏா்வாடி, திருக்குறுங்குடி, மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.
