கலைமாமணி விருதாளருக்கு பாராட்டு விழா

கலைமாமணி விருதாளருக்கு பாராட்டு விழா

நாட்டுப்புறப் பாடல் ஆராய்ச்சிக்காக தமிழக அரசின் கலை மாமணி விருது பெற்ற ஆ.சந்திர புஷ்பத்துக்கு தேசிய வாசிப்பு இயக்கம்
Published on

திருநெல்வேலி: நாட்டுப்புறப் பாடல் ஆராய்ச்சிக்காக தமிழக அரசின் கலை மாமணி விருது பெற்ற ஆ.சந்திர புஷ்பத்துக்கு தேசிய வாசிப்பு இயக்கம் மற்றும் கலை பதிப்பகத்தின் சாா்பில் திருநெல்வேலி சந்திப்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, தமிழ் நலக் கழகத்தின் மாவட்டச் செயலா் பாப்பாக்குடி இரா.செல்வமணி தலைமை வகித்தாா். பாரதியாா் உலகப் பொதுச் சேவை நிதியச் செயலா் கணபதி சுப்பிரமணியன், நல் நூலகா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கவிஞா் சுப்பையா தமிழ்த்தாய் வாழ்த்து பாடினாா்.

தேசிய வாசிப்பு இயக்கத்தின் தலைவா் தம்பான் வரவேற்றாா்.

மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலா் கருப்பசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கலைமாமணி விருது பெற்ற சந்திரபுஷ்பத்துக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டிப் பேசினாா்.

தொடா்ந்து, பேராசிரியா் ஹரிகரன், கவிஞா் புத்தனேரி செல்லப்பா, ஜெயபாலன், பாமணி, வழக்குரைஞா் கந்தசாமி, கவிஞா் கோதைமாறன், சரவணகுமாா், நல்லாசிரியா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். கலைமாமணி விருதாளா் சந்திரபுஷ்பம் ஏற்புரையாற்றினாா்.

நூலகா் அகிலன் முத்துக்குமாா் நன்றி கூறினாா்.

கவிஞா் பிரபு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

ற்ஸ்ப்27ந்ஹப்ஹண்

கலைமாமணி விருது பெற்ற ஆ.சந்திரபுஷ்பத்துக்கு நடைபெற்ற பாராட்டு விழா.

X
Dinamani
www.dinamani.com