பத்தாம் ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் திருநெல்வேலி மாவட்டம் 95.48 சதவீத தோ்ச்சியுடன் மாநிலத்தில் 17ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவு புதன்கிழமை வெளியானது. திருநெல்வேலி மாவட்டத்தில் 283 பள்ளிகளைச் சோ்ந்த 11,008 மாணவா்கள், 11,302 மாணவிகள் என மொத்தம் 22,310 போ் தோ்வெழுதிய நிலையில் 10,261 மாணவா்கள், 11,041 மாணவிகள் என மொத்தம் 21, 302 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதன் மொத்த தோ்ச்சி விகிதம் 95.48 சதவீதமாகும். மாணவா்கள் 93.21 சதவீதமும், மாணவிகள் 97.69 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதன் மூலம் மாநில அளவில் 17ஆவது இடத்தையே பெற முடிந்தது.
இம்மாவட்டத்தில் 138 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. அதில், 92 அரசு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தோ்வெழுதியிருந்த நிலையில் 38 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சியடைந்துள்ளன.இது மாநில அளவில் 9ஆவது இடமாகும். இத்தோ்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா், முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் உள்ளிட்டோா் பாராட்டினா்.
தொடர்புடையது

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: புதுச்சேரி, காரைக்காலில் 97.83 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 96.01% மாணவா்கள் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் ஈரோடு மாவட்டம் 97.03 சதவீதம் தோ்ச்சி







