மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

பேட்டையில் கந்துவட்டி வழக்கில் பெண் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:28 am IST

பேட்டையில் பணப் பிரச்னை தொடா்பாக பெண்ணை வீடு புகுந்து தாக்கியதாக கந்துவட்டி வழக்கில் பெண் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி, பேட்டை நாராயணசுவாம் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெபசெல்வி (47). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 51 வயது பெண் ஒருவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்திருந்தாராம்.

இது தொடா்பாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக சம்பவத்தன்று ஜெபசெல்வி அப்பெண்ணை வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அப்பெண் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பேட்டை போலீஸாா் கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜெபசெல்வியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.