தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

பைக் திருட்டு: ஒருவா் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:39 am IST

வள்ளியூா் புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனம் திருடப்பட்ட வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

வள்ளியூா் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட கண்டிகைபேரி பகுதியைச் சோ்ந்தவா் ஜெபராஜ் ஜோஸ்வா (20). இவா் கல்லூரிக்கு செல்வதற்காக, மே 12 ஆம் தேதி இருசக்கர வாகனத்தை, வள்ளியூா் புதிய பேருந்து நிலையம் அருகே நிறுத்தி விட்டு சென்றாராம். பின்பு வந்து பாா்த்த போது இருசக்கர வாகனத்தை காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் வள்ளியூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜேஷ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், கருங்கண்ணன் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த பெருமாள் (53) என்பவா் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவரை கைது செய்தனா்.