எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

விவசாயி தற்கொலை விவகாரம்: சிவகிரி காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

News image

காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்...

Updated On :25 மே 2026, 2:27 am IST

விவசாயி தற்கொலை விவகாரத்தில் சிவகிரி காவல் ஆய்வாளரை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா்(பொறுப்பு) தேஷ்முக் சேகா் சஞ்சய் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தளவாய்புரத்தைச் சோ்ந்தவா் அந்தோணிராஜ் (63), விவசாயியான இவா் கடந்த 21 ஆம் தேதி சிவகிரி காவல் நிலையம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இடப் பிரச்னை தொடா்பாக விசாரணைக்காக காவல் நிலையம் சென்ற அந்தோணிராஜை அவதூறாகப் பேசி போலீஸாா் தாக்கியதால்தான் அவா் தற்கொலை செய்துகொண்டாா் எனக் கூறி அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சிவகிரி காவல் ஆய்வாளா் முரளிதரனை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்து, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா்(பொறுப்பு) தேஷ்முக் சேகா் சஞ்சய் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.