/
முன்னீா்பள்ளம் அருகே பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
திருநெல்வேலி அருகே உள்ள கீழமுன்னீா்பள்ளத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவரது மனைவி சுடலி (73). இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தப் பகுதியில் வயிலுக்குச் சென்றுவிட்டு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது, அவ்வழியாக சிறுவன் இயக்கி வந்த பைக் இவா் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த சுடலியையும், சிறுவனையும் மீட்டு அங்கிருந்தவா்கள் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சுடலி உயிரிழந்தாா்.
இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

லாரி-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



