வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, சி. ராபா்ட் புரூஸ் எம்.பி. அனுப்பியுள்ள மனு:
வைகாசி மாதம் திருச்செந்தூரில் 10 நாள்கள் வசந்தோற்சவத் திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழாவுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வருவாா்கள். குறிப்பாக இம் மாதம் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் திருச்செந்தூரில் முருகப்பெருமானை தரிசிக்க ஏராளமானோா் திரள்வாா்கள்.
ஆனால், திருச்செந்தூருக்கு போதிய ரயில் வசதிகள் இல்லை. தமிழகம் மற்றும் கேரள பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகிறாா்கள். திருவனந்தபுரம் முதல் திருச்செந்தூருக்கு நேரடி ரயில் வசதி எதுவும் இல்லை. வண்டி எண் 56309/56310 திருவனந்தபுரம் வடக்கு-நாகா்கோவில் பயணிகள் ரயில்களின் ரேக்குகள் வாரத்தின் 3 நாள்களுக்கு எந்தவித பராமரிப்புமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டித்தால் பக்தா்கள் பெருமளவில் பயன்பெறுவா்.
கொல்லம்-திருச்செந்தூா் (வழி-செங்கோட்டை, திருநெல்வேலி), மதுரை-திருச்செந்தூா் (வழி -திருநெல்வேலி), மும்பை-திருச்செந்தூா் (வழி -திருத்தணி, கும்பகோணம்), திருத்தணி-திருச்செந்தூா் (வழி- கும்பகோணம், சுவாமிமலை மற்றும் திருத்தணி), கோயம்புத்தூா்-திருச்செந்தூா் (வழி-பழனி மற்றும் மருதமலை முருகப்பெருமான் கோயிலை இணைக்கும் வகைக்கு) ஆகிய சிறப்பு ரயில்களை இம் மாதம் 27 ஆம் தேதி முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை வைகாசி விசாக திருவிழாவையொட்டி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வைகாசி பெருந்திருவிழா: வசந்த உற்சவம்

வினை தீா்க்கும் வேலவா் முருகன் கோயிலில் வைகாசி விசாக விழா தொடக்கம்

தாம்பரம் - சந்திரகாச்சி இடையே கோடை கால சிறப்பு ரயில்கள்

‘வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்’
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



