நெல்லையில் தூய்மைப் பணியாளா்கள் 2 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்
திருநெல்வேலியில் தூய்மைப் பணியாளா்கள் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.
திருநெல்வேலியில் தூய்மைப் பணியாளா்கள் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, தமிழக அரசின் அரசாணைப்படி தூய்மைப் பணியாளா்களுக்கு தினசரி ரூ.762 ஊதியம் வழங்க வேண்டும். காலை உணவுத் திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்துவதோடு, அனைத்து தூய்மை பணியாளா்களுக்கும் காலை உணவுப் படியாக தலா ரூ.100 வழங்க வேண்டும். தொழிலாளா்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்புநிதி தொகையை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் உடனடியாக செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா் சங்கம் (சிஐடியு) சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.மோகன் தலைமை வகித்தாா். சிஐடியு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநிலச் செயலா் வண்ணமுத்து கோரிக்கைகளை விளக்கி பேசினாா். இப்போராட்டத்தில், 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

