Enable Javscript for better performance
அரசு மருத்துவமனையில் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத்திறனாளிக்கு நகல் அட்டையை வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.
     கோவில்பட்டியையடுத்த கிழவிபட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (50). மாற்றுத்திறனாளியான இவர், 29-1-2013 அன்று கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையைப் பெற்றாராம். இந்த அடையாள அட்டை சில தினங்களுக்கு முன்பு தொலைந்துவிட்டதாம். இதையடுத்து மாரிமுத்து, கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை தொலைந்துவிட்டதாகவும், அதற்கான நகலை இணைத்து போலீஸில் புகார் அளித்தார். அதனைப் பெற்றுக் கொண்ட போலீஸôர், ரசீது வழங்கியதையடுத்து, மாரிமுத்து அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையைப் பெறுவதற்கு செவ்வாய்க்கிழமை சென்றாராம். அப்போது மருத்துவப் பரிசோதனை செய்துதான் புதிய அட்டை வழங்கப்படுமென தெரிவித்தனராம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாரிமுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் முத்துகாந்தாரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதையடுத்து, மருத்துவ இணை இயக்குநர் (நலப் பணி) நல்லதம்பி திவாகரன் மற்றும் நிலைய மருத்துவ அதிகாரி ராஜேந்திரபிரசாத் ஆகியோர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai