Enable Javscript for better performance
ஆவணங்களை நவீனப்படுத்தும் திட்டம் விரைவில் நிறைவுபெறும்:  ஏடிஜிபி ஆஷிஷ் பங்ரா பேட்டி- Dinamani

சுடச்சுட

    

    ஆவணங்களை நவீனப்படுத்தும் திட்டம் விரைவில் நிறைவுபெறும்:  ஏடிஜிபி ஆஷிஷ் பங்ரா பேட்டி

    By  தூத்துக்குடி  |   Published on : 01st August 2013 10:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக காவல் துறையில் ஆவணங்களை நவீனப்படுத்தும் திட்டம் விரைவில் நிறைவு பெறும் என்றார் தமிழக காவல் துறையின் குற்ற ஆவணங்கள் காப்பகம் மற்றும் தொழில்நுட்ப பிரிவு கூடுதல் இயக்குநர் ஆஷிஷ் பங்ரா.
     தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், தென்பாகம் காவல் நிலையம், அனைத்து மகளிர் நிலையம் ஆகியவற்றில் ஆய்வு செய்த பின்பு, செய்தியாளர்களிடம் ஆஷிஷ் பங்ரா கூறியதாவது:
     தமிழகத்தில் காவல் துறையை நவீனப்படுத்தும் வகையில், அனைத்துக் காவல் நிலையங்களும் கணினி மூலம் இணைக்கப்பட உள்ளன.
     இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 1493 காவல் நிலையங்கள், காவல் அதிகாரிகளுக்கான அலுவலங்கள் அனைத்தும் கணினி வலைப் பின்னல் மூலம் இணைக்கப்படும்.
     சென்னையில் உள்ள காவல் துறை தலைமை அலுவலகத்தில் இருந்தே அனைத்து வழக்குகளின் தன்மை, குற்றவாளிகள் குறித்த தகவல்களை எளிதாகப் பெற முடியும், குற்ற எண்ணிக்கையைத் தடுக்கும் வகையில் பழைய குற்றவாளிகளின் வரலாறு குறித்து அறிந்து கொள்ள இயலும்.
     தமிழகத்தில் காவல் துறை தரம் உயர்த்தப்படுவது மட்டுமல்லாமல், ஆவணங்களும் நவீனப்படுத்தப்படும். இந்தத் திட்டம் விரைவில் நிறைவு பெறும் என்றார்.
     இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மா. துரை, மாநகர துணைக் கண்காணிப்பாளர் பெஸ்கி ஆகியோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai