Enable Javscript for better performance
இலுப்பையூரணி ஊராட்சியில் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    இலுப்பையூரணி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
     இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட கைவண்டித் தொழிலாளர் காலனி, என்.ஜி.ஓ. காலனிப் பகுதிகளில் சுமார் 450 வீடுகள் உள்ளன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
     இப் பகுதியில் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அமைத்து குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
     ஊராட்சி உறுப்பினர் கருத்தப்பாண்டி தலைமையில், அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் பங்கேற்றனர். ஊராட்சித் தலைவர், அலுவலகத்திற்கு வெகு நேரமாகியும் வராததையடுத்து, எழுத்தர் ரத்தினக்குமாரிடம் மனு அளித்துவிட்டு, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றனர்.
     அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யாரும் இல்லாததால், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சசிக்குமாரிடம் மனுவை அளித்தனர்.
     பின்னர், கோவில்பட்டி வட்டாட்சியர் ரமேஷிடம் மனு அளித்தனர்.
     இதுகுறித்து கருத்தப்பாண்டி கூறுகையில், குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால், மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
     முதல் கட்டமாக மாவட்ட ஆட்சியரை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) சந்தித்து மனு அளிக்கவுள்ளோம் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai