Enable Javscript for better performance
உடன்குடியில் அம்மா திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    உடன்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட செட்டியாபத்து, வெங்கட்ராமானுஜபுரம் ஆகிய ஊராட்சிகளில் அம்மா திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     திருச்செந்தூர் வட்டாட்சியர் நல்லசிவன் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் இம்மானுவேல் ஜெயக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் ராஜீவ் தாகூர், வட்ட வழங்கல் அலுவலர் செந்தில், உடன்குடி வருவாய் ஆய்வாளர் இசக்கிதுரை, கிராம நிர்வாக அலுவலர் ஜெயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     உடன்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவி மல்லிகா தொடங்கி வைத்தார். உடன்குடி பேரூராட்சித் தலைவி ஆயிஷா உம்மாள், உடன்குடி ஒன்றிய உறுப்பினர்கள் குணசேகரன், ராஜபூபதி, செட்டியாபத்து ஊராட்சித் தலைவி தங்கமணி, வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சித் தலைவர்
     ராஜ்குமார், செட்டியாபத்து ஊராட்சி துணைத் தலைவர் குணசேகர், உடன்குடி ஒன்றிய அதிமுக முன்னாள் செயலர் செல்லப்பாண்டியன், உடன்குடி ஒன்றிய விவசாயிகள் பொதுமக்கள் நலச்சங்கத் தலைவர் சந்திரசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai