Enable Javscript for better performance
கோவில்பட்டியில் ரத்த தான முகாம்- Dinamani

சுடச்சுட

    

    அப்துல்கலாம் ரத்த தான கழகத்தின் சார்பில் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
     நகர அதிமுக செயலர் சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ருக்மணி, நகர்மன்ற உறுப்பினர்கள் முத்துராஜ், சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்றத் தலைவி ஜான்சிராணி முகாமை தொடக்கி வைத்தார். மருத்துவர் கமலவாசன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், 35 பேரிடம் ரத்தம் சேகரித்தனர். மாவட்ட கவுன்சிலர் லட்சுமணப்பெருமாள், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai