Enable Javscript for better performance
தூத்துக்குடியில் அமைச்சர் திடீர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் அமைச்சர் திடீர் ஆய்வு

    By  தூத்துக்குடி,  |   Published on : 01st August 2013 10:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ். அப்துல் ரஹீம், தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
     தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அமைத்துள்ள சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவிகள் விடுதி, கோல்டன் நகர் பகுதியில் உள்ள அரசு கல்லூரி மாணவர் விடுதி, முனியசாமிபுரத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி ஆகியவற்றை அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
     விடுதிகளில் உள்ள சமையலறையை பார்வையிட்ட அமைச்சர், அவற்றை சுத்தமாக வைக்கவும், குடிநீர் வசதிகள், கழிவறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், காலை மாலை இரவு வேளைகளில் தரமான உணவு வழங்கவும் விடுதிக் காப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
     மேலும், மதியம் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை சாப்பிட்டு பார்த்த அமைச்சர், சாம்பார் இன்னும் நன்றாக வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
     விடுதிகளில் பழுதடைந்துள்ள மேற்கூரைகளை உடனே சரிசெய்யுமாறும், மாவட்டத்தில் உள்ள 37 விடுதிகளை மாதந்தோறும் ஆய்வு செய்து மாணவர்களுக்கு தேவையானவற்றை உடனே செய்யுமாறும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அவர் கேட்டுக் கொண்டார்.முன்னதாக அமைச்சருக்கு, தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
     ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அ.சிவகாமி, இரா.பாஸ்கரன், வட்டாட்சியர் ஆழ்வாரம்மாள் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai