Enable Javscript for better performance
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தலில்  டிஎஸ்எப் அணி வேட்பாளர்கள் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தலில்  டிஎஸ்எப் அணி வேட்பாளர்கள் அறிவிப்பு

    By  தூத்துக்குடி  |   Published on : 01st August 2013 10:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தலில் டிஎஸ்எப் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டனர்.
     தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யும் கூட்டம், டிஎஸ்எப் அணித் தலைவர் துரைராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. திருமண்டல லே செயலர் வேட்பாளர் பால்பாண்டியன் முன்னிலை வகித்தார்.
     இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தை சேர்ந்த குருவானவர்களும், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
     கூட்டத்தின்போது வேட்பாளர்கள் சிலர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல துணைத் தலைவர் வேட்பாளராக தாவீது சுந்தரனாரும், சபை மன்ற தலைவர் வேட்பாளராக குருவானவர் எரேமியாவும், குருத்துவச் செயலராக ஸ்பிக்நகர் சேகர தலைவர் குருவானவர் ஜெயசிங்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
     இதேபோல, திருமண்டல நிர்வாககுழு உறுப்பினர் வேட்பாளராக பிரகாசபுரம் சேகர தலைவர் குருவானவர் மு.தனசிங், 35 வயதுக்குள்பட்ட வேட்பாளராக ராஜாவின் கோவில் சேகர தலைவர் யு.டேவிட்ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai