Enable Javscript for better performance
தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையை சீரமைக்கக் கோரி நாளை நடைப்பயணம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையை சீரமைக்கக் கோரி நாளை நடைப்பயணம்

    By  தூத்துக்குடி  |   Published on : 01st August 2013 10:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழுதான நிலையில் காணப்படும் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2 இடங்களில் இருந்து வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) நடைப்பயணம் புறப்படுகிறது.
     இதுகுறித்து அக் கட்சியின் மாவட்டச் செயலர் கே.எஸ். அர்ஜூணன் வெளியிட்ட அறிக்கை:
     தூத்துக்குடியில் இருந்து செல்லும் குழுவுக்கு மாநகரச் செயலர் டி.குமாரவேல், புறநகரச் செயலர் ஆர்.பேச்சிமுத்து ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். இந்தப் பயணத்தை, திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே. பாலபாரதி தொடங்கி வைக்கிறார். திருச்செந்தூரிலிருந்து புறப்படும் குழுவுக்கு ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலர் கே.கந்தசாமி, திருச்செந்தூர் ஒன்றியச் செயலர் சு.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். இந்தப் பயணத்தை நான் (கே.எஸ்.அர்ஜூணன்) தொடங்கி வைக்கிறேன். தொடர்ந்து, ஆத்தூரில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai