Enable Javscript for better performance
பிரகாசபுரம் அணிக்கு ரெடீமர்ஸ் சுழற்கோப்பை- Dinamani

சுடச்சுட

    

    பிரகாசபுரம் அணிக்கு ரெடீமர்ஸ் சுழற்கோப்பை

    By  சாத்தான்குளம்  |   Published on : 01st August 2013 10:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாசரேத்தில், பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற ரெடீமர்ஸ் சுழற்கோப்பைக்கான கால்பந்து போட்டியில் பிரகாசபுரம் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
     நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள், மர்காஷிஸ் ரெக்ரியேஷன்ஸ் கிளப், யுனைடெட் ஸ்டேட் ஆப் அமெரிக்கா அடோனாய் ஸ்போர்ட்ஸ் அகாதெமி ஆகியவை சார்பில் இப் போட்டி நடத்தப்பட்டது.
     இறுதிப் போட்டியில் டைபிரேக்கர் முறையில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரகாசபுரம் ஜேம்ஸ் மெமோரியல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி அணி, பாளையங்கோட்டை புனித சேவியர்ஸ் மேல்நிலைப் பள்ளி அணியை வீழ்த்தியது.
     பரிசளிப்பு விழாவுக்கு, அப்பாத்துரை தலைமை வகித்தார். நாசரேத் பேரூராட்சித் தலைவர் ரவி செல்வக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ரெடீமர்ஸ் சுழற்கோப்பையை வழங்கிப் பேசினார். ஏற்பாடுகளை செல்வக்குமார், ராஜகுமார், ரூபன் துரைசிங், அருண் சாமுவேல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai