Enable Javscript for better performance
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: கணவர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: கணவர் மீது வழக்கு

    By  கோவில்பட்டி  |   Published on : 01st August 2013 10:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி அருகே புதன்கிழமை பள்ளி வளாகத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
     கோவில்பட்டி அருகேயுள்ள அத்தைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். மெக்கானிக். இவரது மனைவி செல்வகளஞ்சியம் (24). இத் தம்பதிக்கு விஜயலட்சுமி (4) என்ற மகள் உள்ளார். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், செல்வகளஞ்சியம் உதவியாளராக பணியாற்றி வருகிறார். பள்ளி வளாகத்தில் புதன்கிழமை பணியாற்றிக் கொண்டிருந்த செல்வகளஞ்சியத்தை, வேல்முருகன் அரிவாளால் வெட்டினாராம். காயமடைந்த அவரை, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு போலீஸôர் வழக்குப்பதிந்து, வேல்முருகனை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai