Enable Javscript for better performance
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை- Dinamani

சுடச்சுட

    

    முத்துநகர் வட்டார களஞ்சியம் மற்றும் எல்ஐசி இணைந்து நடத்திய கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் 492 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ரூ. 4,82,400 வழங்கப்பட்டது.
     முத்துநகர் வட்டார களஞ்சிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு திருநெல்வேலி எல்ஐசி பென்சன் மற்றும் குழு காப்பீட்டு மேலாளர் ராம்நாத் தலைமை வகித்தார்.
     பாண்டியன் கிராம வங்கி மண்டல மேலாளர் முருகேசன், புதுக்குடி பாண்டியன் கிராம வங்கிக் கிளை மேலாளர் பாலசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் முத்துநகர் வட்டார களஞ்சிய குழுக்களின் 492 உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு எல்ஐசி ஆபை திட்டத்தின் கீழ் ரூ. 4,82,400 உதவித்தொகையாக வழங்கப்பட்டது.
     விழாவில் வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துநகர் மேகநாதன், திருச்செந்தூர் ஏழுமலை, விளாத்திகுளம் இளங்குமரன், களஞ்சிய இயக்க வட்டாரத் தலைவி பூலம்மாள்தேசியமணி, இயக்கத் தலைவிகள் மகேஸ்வரி, துளசிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai