Enable Javscript for better performance
லாரி-பைக் மோதல்:  பொறியியல் மாணவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் புதன்கிழமை அதிகாலை லாரி-பைக் மோதியதில் பொறியியல் மாணவர் இறந்தார்.
     புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள மருதன்குடியைச் சேர்ந்த கருணாநிதி மகன் ராம்திலக் (21). இவர், தூத்துக்குடி அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி 4-ம் ஆண்டு படித்து வந்தார்.
     இவர், தனது பைக்கில் புதன்கிழமை அதிகாலை மதுரை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது அணுகுச் சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது பைக் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே ராம் திலக் உயிரிழந்தார். இதுகுறித்து சிப்காட் போலீஸôர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai