Enable Javscript for better performance
விபத்து: மினி லாரி ஓட்டுநர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    எட்டயபுரம் அருகே நிகழ்ந்த விபத்தில் மினி லாரி ஓட்டுநர் இறந்தார்.
     தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த தங்கசாமி மகன் ராஜலிங்கம் (40). இவர், ஓட்டி வந்த மினி லாரி, தூத்துக்குடியிலிருந்து மதுரைக்குச் சென்று கொண்டிருந்ததாம். மினி லாரியில், அதே பகுதியைச் சேர்ந்த காசிராஜன் மகன் முருகேசன் (39), சக்கரைப்பாண்டியன் மகன் சண்முகராஜ் (23), செல்வராஜ் மகன் கோபிநாத் (22) ஆகியோர் இருந்தனராம்.மேலக்கரந்தை பகுதியில் சாலையோரம் லாரியை நிறுத்தி டயரில் உள்ள காற்றின் அளவை சோதனை செய்தபோது, அவ்வழியே வந்த மற்றொரு லாரி மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் ராஜலிங்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து மாசார்ப்பட்டி போலீஸôர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai