Enable Javscript for better performance
இளம்பெண் மர்மச் சாவு - Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் இளம்பெண் சாவில் மர்மம் உள்ளதாகக் கூறி அவரது உறவினர்கள், தென்பாகம் காவல் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

    தூத்துக்குடி அந்தோனியார்புரம் 3 சென்ட் பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டியன் மகள் செல்வக்கனி (23). இவர், அண்ணாநகர் விவிடி சிக்னல் அருகேயுள்ள தனியார் செல்போன் நிறுவன முகவர் அலுவலகத்தில் வேலைபார்த்து வந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகலில் செல்வக்கனியின் சகோதரர் கனிராஜை அழைத்த தென்பாகம் போலீஸார் செல்வக்கனி தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவித்தனராம். அவரது சடலம் தூத்துக்குடி அரசு மருத்துவனையில் வைக்கப்பட்டிருந்ததாம்.

    இதற்கிடையே, செல்வக்கனி இறந்த தகவல் கிடைத்தும் அவரது உறவினர்கள் தென்பாகம் காவல் நிலையம் முன்பு திரண்டனர். செல்வக்கனியின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறிய அவர்கள் செல்போன் நிறுவன முகவர் அலுவலக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், செல்வக்கனியுடன் பணியாற்றிய ஒரு இளைஞரை அண்மையில் வேலையில் இருந்து நீக்கியதாகவும், செல்வக்கனியையும் வேலையை விட்டு நீக்கிவிடுவதாக நிர்வாகி தெரிவித்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனர். தொடர்ந்து தென்பாகம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai