Enable Javscript for better performance
தாய்ப்பால் கொடுத்தால்தான் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்- Dinamani

சுடச்சுட

    

    தாய்ப்பால் கொடுத்தால்தான் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்

    By தூத்துக்குடி,  |   Published on : 02nd August 2013 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தாய்ப்பால் கொடுப்பதால்தான் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைக்கும் என்றார் தூத்துக்குடி மாநராட்சி ஆணையர் சோ. மதுமதி.

    தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவைத் தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது:

    தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தாமாகவே தாய்ப்பால் கொடுக்க வேண்டும். வேலைக்குச் செல்லும் காரணத்தால் புட்டிப்பாலை கொடுக்கும் நிலை உள்ளது. இதனை தவிர்த்து குழந்தைக்கு குறைந்தது 6 மாதங்களாவது தாய்ப்பால் ஊட்ட வேண்டும்.

    தாய்ப்பால் கொடுப்பதால்தான் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. குழந்தை பிறந்த உடனே வருகிற சீம்பாலில் அதிக சத்துக்கள் உள்ளன. தாய்மார்கள் தங்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்க கீரை, பருப்பு, காய்கனி வகைகளை உணவில் அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்றார் அவர்.

    விழாவின்போது, மருத்துவமனையில் அண்மையில் அனாதையாக விடப்பட்ட 2 பெண் குழந்தைகள் அடைக்கலாபுரம் குழந்தைகள் பராமரிப்பு இல்ல நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதன்மையர் எட்வின் ஜோ, கண்காணிப்பாளர் ராஜேந்திர ரத்னு, துணை முதல்வர் நெப்போலியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai