Enable Javscript for better performance
திருச்செந்தூரில் பேரணி - Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

    திருச்செந்தூர் வட்டார வளமையம், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம், அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) நடைபெறுகிறது.

    இம் முகாமிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதன்கிழமை பேரணி நடைபெற்றது. திருச்செந்தூர் தேரடித் திடலில் தொடங்கிய பேரணியை, பேரூராட்சித் தலைவர் மு.சுரேஷ்பாபு தொடங்கி வைத்தார். மாவட்ட பள்ளிகள் துணை ஆய்வாளர் சங்கரய்யா தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் அன்னபுஷ்பம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் திருச்செந்தூர் ஸ்ரீ சரவணய்யர் நடுநிலைப் பள்ளி, செந்தில்முருகன் நடுநிலைப் பள்ளி, அருள்மிகு செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் கலந்துகொண்டு ரதவீதி வழியாக வலம் வந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai