Enable Javscript for better performance
முத்தையாபுரத்தில் அம்மா திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    :தூத்துக்குடி முத்தையாபுரத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    முகாமை தொடங்கி வைத்து, தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சி.த.செல்லப்பாண்டியன் பேசுகையில், அம்மா திட்டத்தின் மூலம் பொதுமக்கள் முழுமையாக பயனடைவதற்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    வட்டாட்சியர் ஆழ்வாரம்மாள், உணவு வழங்கல் துறை வட்டாட்சியர் ஜூலியன், மண்டல இணை வட்டாட்சியர் சங்கரப்பாண்டியன், வருவாய் ஆய்வாளர் வடிவேல், கிராம நிர்வாக அதிகாரிகள் ராமகிருஷ்ணன், மாரிசங்கர், செந்தில் குமார், ஜான்சி, மாமன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், பொன்ராஜ், ஆத்திக்கண், ஜோசப் ஆனந்தம், பெரியசாமி, தனராஜ், அதிமுக வட்டச் செயலர்கள் கந்தசாமி, ஜெகநாதன், ஜெய்கணேஷ், சரவணக்குமார், பேச்சிமுத்து, ஒன்றிய மாணவரணிச் செயலர் எஸ். கே. மாரியப்பன், கூட்டுறவுப் பணியாளர் சங்கச் செயலர் தங்கத்துரை உள்ளிட்டோர் முகாமில் கலந்துகொண்டனர்.

    பொத்தகாலன்விளையில்...

    சாத்தான்குளம்:  சாத்தான்குளம் அருகேயுள்ள சாஸ்தாவிநல்லூர் ஊராட்சிக்குள்பட்ட பொத்தகாலன்விளையில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

    சாஸ்தாவிநல்லூர் ஊராட்சித் தலைவர் சூ.மரியஅந்தோனிஜார்ஜ் தலைமை வகித்தார். வட்டாட்சியர் பொ.மிகாவேல் ஞானதீபம் வரவேற்றார்.

    மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கு.மனோகரன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் கொங்கன் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றனர். 353 மனுக்களில் 217 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    வட்ட வழங்கல் அலுவலர் பேச்சிமுத்து, வருவாய் ஆய்வாளர் ஜெ.அகிலா, கிராம நிர்வாக அலுவலர்கள் சுடலைமுத்து, ஜெயபால், சுடலைவடிவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மண்டல துணை வட்டாட்சியர் து. செந்தூர்ராஜன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai