Enable Javscript for better performance
\\\"வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    "வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    By 'தூத்துக்குடி  |   Published on : 02nd August 2013 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கா. சண்முகசுந்தர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள் தங்களது தகுதியினை வளர்த்துக் கொள்ள தேவையான தொழில் பயிற்சிக் கட்டணம், போட்டித் தேர்வுக் கட்டணம் போன்றவற்றை செலுத்திட உதவிடும் வகையில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலமாகச் செயல்படுத்தப்படுகிறது.

    ஏற்கெனவே இந்தத் திட்டத்தில் பயன்பெற்றவர்கள் மீண்டும் உதவித்தொகை பெறத் தகுதியற்றவர்கள் ஆவர். இந்தத் திட்டத்தில் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.

    இந்தத் திட்டத்தில் பயன்பெற பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ் 2 மற்றும் பட்டயப் படிப்பு முடித்துள்ளவர்கள், தங்கள் கல்வித் தகுதியினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.

    30.6.2008-க்கு முன் பதிவு செய்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.50,000க்குள் இருக்க வேண்டும். பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நாளில் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகள் இந்தத் திட்டத்தில் பயன்பெற எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் மட்டும் போதுமானது. மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவுற்றிருந்தால் போதுமானது.

    விண்ணப்பிக்கும் நாளில் 40 வயதுக்குள் இருக்க வேணடும். பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். எனவே, தகுதியுடைய வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள், அலுவலக வேலை நாளில், வேலைவாய்ப்பு அலுவலக அசல் பதிவு அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் உடல்ஊனமுற்றோர் அடையாள அட்டையுடன் நேரில் வந்து தாக்கல் செய்ய வேண்டும்.

    வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கும் பதிவுதாரர்களுக்கு, தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புக்கான நேர்காணலுக்கும் பரிந்துரை செய்யப்படும் என்பதால், தகுதியுடைய பதிவுதாரர்கள் தயக்கமின்றி ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai