Enable Javscript for better performance
28 வாகனங்களுக்கு அபராதம் - Dinamani

சுடச்சுட

    

    : தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறி அதிக அளவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்றதாக ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் உள்பட 28 வாகனங்கள் மீது வியாழக்கிழமை அபாரதம் விதிக்கப்பட்டது.

    தூத்துக்குடியில் வாகனங்களில் அதிகளவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்வதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் பகுதியில் வியாழக்கிழமை திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, அதிகமான குழந்தைகளை ஏற்றிச் சென்ற 5 ஷேர் ஆட்டோக்கள், 22 ஆட்டோக்கள், ஒரு மாருதி வேன் என மொத்தம் 28 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டது.

    பாதுகாப்பற்ற முறையில் அதிக குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai