Enable Javscript for better performance
அம்மன் கோவிலை அகற்ற முயன்ற அதிகாரிகளை கண்டித்து முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    அம்மன் கோவிலை அகற்ற முயன்ற அதிகாரிகளை கண்டித்து முற்றுகை

    By திருச்செந்தூர்  |   Published on : 03rd August 2013 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூரில் அம்மன் கோவிலை அகற்ற முயன்ற அதிகாரிகளை பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

     திருச்செந்தூர் ஜீவாநகர் அருகே மீனவர் காலனி உள்ளது. இங்கு வசிப்பவர்களுக்கு ஆலந்தலை அருகில் சுனாமி குடியிருப்பில் அரசு சார்பில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு சிலர் பழைய இடத்திலே வசித்து வந்தனர்.

     கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் ஆளும் கட்சியினர் நிவாரண உதவியும் வழங்கினர். இந்நிலையில் மீனவர் காலனி பகுதி மக்கள் வழிபட்டு வந்த வன பேச்சியம்மன் கோவிலை அகற்றிட அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் திருச்செந்தூர் வட்டாட்சியர் ப.நல்லசிவன், மண்டல துணை வட்டாட்சியர் ராஜுவ் தாகூர் ஜேக்கப், வருவாய் ஆய்வாளர் சின்னத்துரை, கிராம நிர்வாக அலுவலர் செல்வலிங்கம், காவல் ஆய்வாளர் கோ.பத்மநாபபிள்ளை உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை அங்கு வந்தனர்.

     இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களுடன்

    பாஜக மாவட்டச் செயலர் செந்தில்வேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமேஸ்வரன்,ஒன்றியத் தலைவர் சிவசெந்தில், நகரத் தலைர் செந்தில், இந்து முன்னனி நகரத் தலைவர் அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

     மக்கள் வழிபடும் இந்த கோவில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில்தான் உள்ளது என அவர்கள் முறையிட்டனர். அவர்களிடம் திருச்செந்தூர் வட்டாட்சியர் நல்லசிவன், சம்பந்தப்பட்ட கோவில் தனியாருக்குச் சொந்தமான இடம் என்றால் அதற்குரிய ஆவணங்களை சனிக்கிழமைக்குள் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால், ஞாயிற்றுக்கிழமை கோவில் அகற்றப்படும் என்றார். அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai