Enable Javscript for better performance
ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    பேய்க்குளத்தில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பேய்க்குளம் கல்லடைப்புத் தெருவைச் சேர்ந்தவர் ஆ.தோமாஸ்லூர்துராஜ் (33). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டாம். இந்நிலையில் மது அருந்துவதற்காக வீட்டில் வளர்த்து வந்த ஆட்டை இவர் விற்று விட்டாராம். இதனால் உண்டான கருத்துவேறுபாடு காரணமாக இவருடைய மனைவி குழந்தைகளுடன் அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம்.

    இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தோமாஸ் லூர்துராஜ் வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை கொண்டாராம். வியாழக்கிழமை அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால் உறவினர்கள் அவரது வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது அவர் இறந்து போனது தெரியவந்தது.  இதுகுறித்து சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் அழகுதுரை வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai