Enable Javscript for better performance
இந்து மகாசபா ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இந்து மகாசபாவின் தூத்துக்குடி மாவட்ட ஆலோசனைக் கூட்டம், உடன்குடியில் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். இந்து மகாசபா மாவட்ட அமைப்பாளர் சு.அய்யப்பன், மாவட்டப் பொதுச் செயலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியன் பேசியதாவது:

     உடன்குடியில் இந்துக்களை மதம் மாற்றும் முயற்சியில் சிலர் ஈடுபடுகிறார்கள். இதனால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

    தீர்மானங்கள்: இந்து கோவில்களில் ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை, ஏழை இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    இக் கூட்டத்தில் மாநில செயலர் புருஷோத்தமன், மாவட்ட கெüரவ ஆலோசகர் செல்லத்துரைபாண்டியன், மாவட்ட துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளர் சுவாமிநாதன், கயத்தாறு ஒன்றிய இளைஞரணித் தலைவர் கணேஷ்குமார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பசுபதி, உடன்குடி ஒன்றியத் தலைவர் சதீஷ், விஸ்வகர்மா ஐந்தொழிலாளர் சங்கத் தலைவர் வள்ளிசுந்தரம், அய்யன்உத்திரம், மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai