Enable Javscript for better performance
உடன்குடியில் குடிநீர்த் தொட்டி திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக இளைஞர்,இளம்பெண்கள் பாசறை சார்பில் உடன்குடி பேருந்து நிலையத்தில் குடிநீர்த் தொட்டி திறக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு உடன்குடி ஒன்றிய அதிமுக செயலர் அம்மன் நாராயணன் தலைமை வகித்தார். நகரச்செயலர் கோவில்மணி முன்னிலை வகித்தார். இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் மாநில துணைச் செயலர் மனோகரன் குடிநீர்த் தொட்டியை திறந்து வைத்தார்.  உடன்குடி ஊராட்சி ஒன்றிய தலைவி மல்லிகா, துணைத் தலைவர் ராஜதுரை,மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் மூர்த்தி, மாநிலப் பேச்சாளர் பொன்ஸ்ரீராம், ஒன்றிய எம்ஜிஆர் மன்றச் செயலர் பரமசிவன், ஒன்றிய மகளிரணிச் செயலர் லட்சுமி, வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜ்குமார், அதிமுக நகர துணைச் செயலர்அப்துல்காதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai