Enable Javscript for better performance
குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

    எட்டயபுரம் கீழவாசலைச் சேர்ந்த பரமசிவன் மகன் மாடசாமி (28). இப்போது மந்தித்தோப்பில் குடியிருந்து வருகிறார். இவர் மீது கோவில்பட்டி மேற்கு மற்றும் கழுகுமலை காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    அண்மையில், மந்தித்தோப்பு ஏ.ஆர். நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்த ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த சுமார் 14 பவுன் தங்கநகையை பறித்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்.பி. துரை, கோவில்பட்டி டி.எஸ்.பி. ராஜேந்திரன், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமாருக்கு பரிந்துரை செய்தனர்.

    அதன்பேரில் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் ஆஷிஷ்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து ஏற்கெனவே பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள அவரை குண்டர் தடுப்புக் காவலுக்கு மாற்றுவதற்கான ஆணையை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ் அளித்தார். அதன்பேரில் மாடசாமி, குண்டர் தடுப்புக் காவலுக்கு மாற்றப்பட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai