Enable Javscript for better performance
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி - Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி

    By கோவில்பட்டி,  |   Published on : 03rd August 2013 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு, புஷ்பாஞ்சலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீபூவனநாத சுவாமி கோவிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏக தின லட்சார்ச்சனை விழா நடைபெறுவது வழக்கம்.

    அதுபோல வெள்ளிக்கிழமை லட்சார்ச்சனை நடைபெற்றது. உலக நலம் காக்கவும், மழை வேண்டியும் இந்த லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவனந்தல் பூஜை நடைபெற்றது.

    பின்னர் 6 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது.  தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. காலை 7 மணிக்கு லட்சார்ச்சனை தொடங்கியது.

     சுவாமிநாத பட்டர், செண்பகராம பட்டர், கோபாலகிருஷ்ண பட்டர், சங்கர பட்டர் ஆகியோர் தலைமையில், 20 சிவாச்சாரியார்கள் லட்சார்ச்சனையை நடத்தினர்.

    இரவு 8 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து செண்பகவல்லி அம்மனுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி ஆணையர் செல்லத்துரை, கோவில் நிர்வாக அலுவலர் கசன்காத்தபெருமாள், கோவில் தலைமை எழுத்தர் ராமலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

     இம்மாதம் 9-ம் தேதி செண்பகவல்லி அம்பாளுக்கு வளைகாப்பு விழா நடைபெறுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai