Enable Javscript for better performance
சட்டப்படிப்பு பயிற்சி மையம் நடத்தியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சட்டப்படிப்பு பயிற்சி மையம் நடத்தியவர் கைது

    By திருச்செந்தூர்,  |   Published on : 03rd August 2013 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூரில் வெளிமாநில சட்டப்படிப்பான எல்எல்பி பயிற்சி மையம் நடத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.

    காயாமொழியைச் சேர்ந்த பாலகிருஷ்ண ஆதித்தன் மகன் பி.ராம்குமார் ஆதித்தன் (40). இவர் வீரபாண்டியன்பட்டணத்தில் வெளிமாநில சட்டப்படிப்பான எல்எல்பி படிப்பதற்கான பயிற்சி மையம் நடத்தி வந்தார். இந்நிலையில் விதிகளுக்கு புறம்பாக அவர் பயிற்சி மையம் நடத்தி வருவதாக அருண் என்ற மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. துரையிடம் புகார் அளித்தார். இதனடிப்படையில் எஸ்பி உத்தரவின் பேரில், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஞானசேகரன், காவல் ஆய்வாளர் கோ.பத்மநாப பிள்ளை, உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பி.ராம்குமார் ஆதித்தனை கைது செய்து திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai