Enable Javscript for better performance
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    கோவில்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் வீராச்சாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் விநாயகா ரமேஷ் முன்னிலை வகித்தார்.

    மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கடகிருஷ்ணன், நாகூர்கனி ஆகியோர் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்துப் பேசினர். வாகனங்கள் ஓட்டும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், செல்போன் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதினால் ஏற்படும் விளைவுகள், சாலை விபத்துக்களை தவிர்ப்பதற்கு நாம் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கிப் பேசினர்.

    இம்முகாமில், ரோட்டரி சங்கப் பொருளாளர் பரமேஸ்வரன், முன்னாள் சங்கத் தலைவர்கள் ரஜினிகாந்த், சீனிவாசன், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், மோட்டார் வாகன பயிற்சி மையங்களின் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக ரோட்டரி சங்கச் செயலர் ஜெயப்பிரகாஷ்நாராயணசாமி வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் முத்துச்செல்வன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai